速報APP / 圖書與參考資源 / புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசா

புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசா

價格:免費

更新日期:2019-08-07

檔案大小:3.8M

目前版本:4.0

版本需求:Android 4.0 以上版本

官方網站:mailto:roostertech111@gmail.com

Email:https://kmprivacy.blogspot.com/p/privacy-policy-karthick-murugan-built_7.html

புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசாரதி(圖1)-速報App

நா.பார்த்தசாரதி புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது.

புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசாரதி(圖2)-速報App

புறநானூற்றிலுள்ள ஒரு சம்பவத்தைச் சித்திரிக்கும் பாங்கிலமைந்த பாடல்களை எளியநடையில் கதை சொல்வது போன்று விளக்கும் முயற்சியே இந்தப் புத்தகம்.

புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசாரதி(圖3)-速報App

இவை புறநானூற்றுச் சிறுகதைகள் என்ற தொடராகச் சுதேசமித்திரன் வார மலரில் முன்பு நா. பார்த்தசாரதி எழுதியவை. மாணவர்களுக்கோ சின்னஞ்சிறுவர்க்கோ, நேரே புறநானூற்றுப் புத்தகத்தைக் கையிலெடுத்துப் பாடல்களையும், பதவுரையையும் படித்தால்கூட இவற்றில் இவ்வளவு சுவையான சம்பவமோ, கதையோ, நிகழ்ச்சியோ அமைந்திருப்பது புரிந்துவிடாது.ஆனால் இந்நூலில் பாடல்களுக்கு முன்பாக இங்கு விவரிக்கப் பட்டிருப்பதுபோல, விவரிக்கப்பட்ட விளக்கத்தைப் படித்தால் புறநானூற்றுப் பாடலிலுள்ள சுவை புலப்படும். இவற்றில் நா. பார்த்தசாரதி விளக்க எடுத்துக் கொண்டவை போன்ற தேர்ந்தெடுத்த சிலவற்றை விளக்கும் மாணவர்களுக்கான துணைப்பாடநூல் ஒன்றை முன்பு நா. பார்த்தசாரதி எழுதினார். மாணவர்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பல பதிப்புக்கள் துணைப்பாடமாக அந்நூல் இருந்தது.

புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசாரதி(圖4)-速報App

மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றையவர்களுக்கும் பயன்படுகிற விதத்தில் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புறநானூற்றுப் பாடல்களுக்கு இங்குக் கதை வடிவ விளக்கம் தரப்பட்டிருக்கிறது. புறநானூற்றின் பிறபகுதிகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நாற்பதுக்கு மேற்பட்ட பாடல்களின் விளக்கம் துண்டுமானால் இந்நூலாசிரியரின் நோக்கம் நிறைவேறினாற்போலத்தான்.

புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசாரதி(圖5)-速報App

சரியான முறையிலும் எளிமையான விதத்திலும் மக்களுக்கு வழங்கப்பட்டால் சங்க இலக்கியப் பாடல்களைப் பற்றிய பயம் அறவே நீங்கிவிடும். ஒன்றைப் பற்றிய தயக்கத்தையும் பயத்தையும் நீக்குவதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் மிகச் சிறந்தது எளிமைப்படுத்தி எல்லாரையும் இரசிக்கச் செய்வது. எளிமைப் படுத்தி எல்லாரையும் இரசிக்கப் பழக்கப்படுத்தி விட்டுவிட்டால் தொன்னூலுக்கு அஞ்சித் தடுமாறும் நிலைமை மெல்ல மெல்ல மறைந்துவிடும். இரசிகத் தன்மைப் பயிற்சியைப் போல் பயத்தையும் தயக்கத்தையும் போக்க வேறெதனாலும் முடியாது.

புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசாரதி(圖6)-速報App

இதை இப்போது தமிழ்ப் புத்தகாலயத்தார் நூலாகக் கொண்டு வருகிறார்கள். நன்றி, வணக்கம்.

புறநானூற்றுச் சிறுகதைகள் - நா. பார்த்தசாரதி(圖7)-速報App